பழனியில் மாணவர் சங்கத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


பழனியில் மாணவர் சங்கத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2021 9:32 PM IST (Updated: 3 Sept 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

பழனியில் மாணவர் சங்கத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி:
இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஆகியவை சார்பில் பழனியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதற்கு மாணவர் சங்க மாவட்ட செயலாளர் முகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வமுருகன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் நூருல்ஹூதா, நகர செயலாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் மாணவர்களின் அடிப்படை கல்வித்தரத்தை உயர்த்த மாதிரி புத்தகம் வழங்கப்படுகிறது. இந்த புத்தகம் இணையவழி வாயிலாக மாணவர்களுக்கு அனுப்பப்படுவதால், அதை ஜெராக்ஸ் எடுக்க வேண்டி உள்ளது. இதனால் பெற்றோர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.800 வரை செலவாகிறது. கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே இலவசமாக மாதிரி புத்தகத்தை வழங்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். இதில் பலர் கலந்துகொண்டனர்.

Next Story