6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

பெரம்பலூரில் 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தடுப்பு பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மேற்பார்வையில், ஆட்கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான், போலீசார் மருதமுத்து, சுகன்யா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் சாந்தி, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் சித்ரா, சைல்டு லைன் பட்டு ஆகியோருடன் இணைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெரம்பலூர் நகரில் 6 குழந்தை தொழிலாளர்களை மீட்டு, அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை சைல்டு லைன் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் உங்கள் பகுதியில் ஏதேனும் குழந்தை தொழிலாளர்களை கண்டால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று பொதுமக்களிடம், போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story