மின்சார டிரான்ஸ்பார்மரில் மோதிய டிப்பர் லாரி

மின்சார டிரான்ஸ்பார்மரில் டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
கன்னிவாடி:
செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக டிப்பர் லாரிகளில் மணல் அள்ளி கொட்டப்படுகிறது.
அதன்படி தர்மத்துப்பட்டியில் இருந்து கன்னிவாடி நோக்கி மண் ஏற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. காரமடை அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி இழந்தது.
பின்னர் நிலைதடுமாறிய லாரி, சாலையோர பள்ளத்தில் இறங்கி அங்கிருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் மோதி நின்றது. விபத்து ஏற்பட்டவுடன் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
லாரி மோதியதில் மின்சார டிரான்ஸ்பார்மர் சேதம் அடைந்தது. இதுகுறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story