மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது


மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது
x
தினத்தந்தி 5 Sep 2021 6:24 PM GMT (Updated: 5 Sep 2021 6:24 PM GMT)

மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டியின்போது கூறினார்.

கூடலூர்

மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டியின்போது கூறினார்.

தலைமை விஞ்ஞானி

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். பின்னர் மசினகுடி அருகே உள்ள ஆனைக்கட்டி ஆதிவாசி கிராமத்துக்கு சென்றார். அங்கு மக்களை சந்தித்து சுகாதாரம், குழந்தைகளின் கல்வி நிலை, கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேட்டறிந்தார். 

தொடர்ந்து பள்ளிக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளதா? என விசாரித்தார். தொடர்ந்து ஆதிவாசி மக்களிடம் குழந்தைகள் அனைவரையும் கண்டிப்பாக படிக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர்  தெப்பக்காடு பகுதிக்கு வந்த சவுமியா சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

2-வது தவணை தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து விட்டது. இதேபோல் தமிழ்நாட்டிலும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழுமையாக நடைபெற்று உள்ளது. 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள வேண்டும்.

கேரளா மாநிலத்தில் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. 3-வது அலை வராமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

நேரடி வகுப்பு

இன்றைய காலக்கட்டத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று நேரடி வகுப்பில் கலந்து கொள்வது அவசியம். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு வராது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து முதுமலை வனப்பகுதியை பார்வையிட்டார். 


Next Story