கடலில் வீணாக கலக்கும் மழைநீர்


கடலில் வீணாக கலக்கும் மழைநீர்
x

அதிராம்பட்டினத்தில் கடலில் வீணாக மழைநீர் கலந்து வருகிறது. வீணாகும் தண்ணிரை கொண்டு கருங்குளத்தை நிரப்ப வேணடும் என்று கிராமமக்கள் வலியுறுத்தினர்.

அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினத்தில் கடலில் வீணாக மழைநீர் கலந்து வருகிறது. வீணாகும் தண்ணிரை கொண்டு கருங்குளத்தை நிரப்ப வேணடும் என்று கிராமமக்கள் வலியுறுத்தினர். 
தொடர் மழை 
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால்  தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தற்ேபாது அதிராம்பட்டினம் பகுதியில் குளிர்ச்சியான சுற்றுச்சூழல் நிலவி வருகிறது. 
அதிராம்பட்டினம் அருகில் கருங்குளம் கிராமம் உள்ளது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்களுக்கு கருங்குளம் நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்த குளத்தில் உள்ள தண்ணீரை நம்பி 300 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால் இந்தகுளம் முறையாக தூர்வாரப்படாமலும், பராமரிக்கப்படாமலும் உள்ளது. 
வீணாக கடலில் கலக்கும் மழைநீர்
இந்த குளத்திற்கு பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாததால் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகிறது. இங்கு உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் வரும் தண்ணீரும் உப்பு நீராக மாறிவிட்டது. இந்தநிலையில் நசுவினி ஆற்றில் அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை தண்ணீர் வெள்ளம் போல்  கரை புரண்டு ஓடுகிறது. இந்த மழைநீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இந்த நீரை தேக்கி வைத்தால் கோடை காலங்களில் கால்நடைகள் மற்றும் விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்றும், இந்த தண்ணீரை தேக்கி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். 
கருங்குளத்தை நிரப்ப வேண்டும்
இதுகுறித்து கருங்குளம் கிராமக்கள் கூறுகையில்,
எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. தற்போது எங்கள் கிராமத்தில் நீர் ஆதாரமாக விளங்குகின்ற கருங்குளத்தில் தண்ணீர் நிரம்பினால் அனைத்து விவசாய நிலங்களும் பயன்பெறும். மேலும் குடிநீருக்கும் தட்டுப்பாடு இருக்காது. நசுவினி ஆற்றில் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடும்  மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை கொண்டு கருங்குளத்தை நிரப்ப வேண்டும். மேலும் கருங்குளத்தை தூர்வார வேண்டும் என்றனர்.

Next Story