சோளிங்கர் ஏரி நிரம்பி வழிந்தது
சோளிங்கர் ஏரி நிரம்பி வழிந்தது
சோளிங்கர்
சோளிங்கர் ஏரி நிவர் புயல் கன மழையால் நிரம்பியது. அதன் பிறகு தற்போது சோளிங்கர் நிரம்பி வழிந்தது. ஏரியில் இருந்து ஆர்ப்பரிக்கும் சத்ததுடன் வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடுகிறது. பொதுமக்களும், விவசாயிகளும் ஏரியின் கடைவாசல் பகுதிக்கு சென்று வேடிக்கை பார்க்கின்றனர். ஒருசிலர் தங்களின் செல்போன்களில் ெசல்பி எடுத்துக்கொள்கின்றனர்.
சமீப காலமாக ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள கலவகுண்டா அணை திறக்கப்பட்டதால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொன்னை ஆற்றின் கரையோரம் உள்ள ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு பொன்னை அணைக்கட்டில் இருந்து இரு கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் சோளிங்கர் ஒன்றியத்தில் தகரகுப்பம், ஏரிமுன்னூர், ரெண்டாடி, பெருங்காஞ்சி, நந்திமங்களம், சோளிங்கர் என 6 ஏரிகள் நிரம்பி உள்ளது. பிற ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story