மாவட்ட செய்திகள்

இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு + "||" + Bilateral conflict; Case against 7 people including women

இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு
இருதரப்பினர் மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே காசாங்கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் கமலா(வயது 47). இவரது வீட்டின் அருகே உள்ள வீட்டை சேர்ந்தவர் காளியம்மாள்(35). கமலாவின் இடத்தில் காளியம்மாள் குடும்பத்தினர் துணிகளை காய வைப்பதற்காக கம்பம் நட்டு, துணிகளை அதில் போட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து காளியம்மாளிடம் கமலா கேட்டதையடுத்து, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தகராறு முற்றிய நிலையில், அங்கே கமலாவின் குடும்பத்தை சேர்ந்த கணேசமூர்த்தி, திருக்குமரன், ஆர்த்தி மற்றும் காளியம்மாளின் குடும்பத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி, சந்துரு ஆகியோர் வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து கமலா, கணேசமூர்த்தி, திருக்குமரன், ஆர்த்தி மற்றும் காளியம்மாள், சத்தியமூர்த்தி, சந்துரு ஆகிய 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரெயில்வேயில் வேலை வாங்க முயன்ற தாய்-மகன் மீது வழக்கு
போலி ஆவணம் கொடுத்து ரெயில்வேயில் வேலை வாங்க முயன்ற தாய்-மகன் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2. வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பணமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பணமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
3. மணல் மூட்டைகள் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல்; வாலிபர் மீது வழக்கு
மணல் மூட்டைகள் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல் செய்யப்பட்டு, வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4. மரத்தில் தழை ஒடித்ததில் தகராறு; இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு
மரத்தில் தழை ஒடித்ததில் தகராறு தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5. குடிநீர் பிடித்ததில் மோதல்; பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு
குடிநீர் பிடித்ததில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.