தென்காசி :பெயிண்டர் தற்கொலை
பெயிண்டர் தற்கொலை
தென்காசி :
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன் மகன் வைரமுத்து (வயது 47). பெயிண்டர். குடும்பத்தகராறில் பெயிண்டர் வைரமுத்து தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் சேலையால் வைரமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வைரமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைரமுத்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது பற்றி கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story