மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி


மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
x
தினத்தந்தி 9 Sep 2021 8:37 PM GMT (Updated: 2021-09-10T02:07:39+05:30)

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார்

திருச்சி
திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பகுதியை சேர்ந்தவர் அப்துல்ஹக்கீம் (வயது 35). இவர் பெல் கணேசாபுரத்தில் உள்ள இன்வெர்ட்டர் பொருத்தும் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை பாலக்கரை பூந்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்வெர்ட்டர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாரதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மயங்கி கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story