மங்கலம் அருகே உள்ள சாமளாபுரம் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.


மங்கலம் அருகே உள்ள சாமளாபுரம் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
x
தினத்தந்தி 11 Sep 2021 4:08 PM GMT (Updated: 11 Sep 2021 4:08 PM GMT)

மங்கலம் அருகே உள்ள சாமளாபுரம் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

மங்கலம், 
மங்கலம் அருகே உள்ள சாமளாபுரம் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அதுபோல் பொங்கலூர் பகுதி விநாயகர் சிலைகள் பி.ஏ.பி. வாய்க்காலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதலின்படி, 16 விநாயகர் சிலைகள் இந்து முன்னணி அமைப்பு சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும். மூன்று சிலைகள் பொது மக்கள் சார்பில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
 இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் வாகனங்கள் மூலம் எடுத்து வரப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன.
வாய்க்காலில் கரைப்பு
இதுபோல் பொங்கலூர் ஒன்றியம் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 27 விநாயகர் சிலைகள் தனியார் இடங்களில் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதுபோல் காமநாயக்கன்பாளையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 26 சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்த சிலைகள்  வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. மேலும் பொங்கலூர் பி.ஏ.பி வாய்க்கால் பகுதியில் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வைக்கப்பட்டிருந்த 10 சிலைகளும், காமநாயக்கன்பாளையம் எல்லைக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 2 சிலைகளும் பி.ஏ.பி. வாய்க்காலில்  கரைக்கப்பட்டன.
பல்லடம் பகுதியில் இருந்தும் வந்திருந்த 25 சிலைகள் பி.ஏ.பி வாய்க்காலில் கரைக்கப்பட்டது. பொங்கலூர் ஒன்றியத்தின்கிழக்குப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 17 சிலைகள் அலகுமலை அருகே உள்ள பாறை குழி நீர்நிலையில் கரைக்கப்பட்டது. காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வைக்கப்பட்டிருந்த 24 சிலைகள் கரைக்கப்பட்டன. இதையொட்டி பல்லடம்  துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ராகவி, அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், கருப்பசாமி உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story