மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் படுகாயம் + "||" + Motorcycle accident

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் படுகாயம்
குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
குளித்தலை,
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தா.பேட்டை பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 24). இவர் திருச்சி வெளியனூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி பகுதியில் விக்னேஸ்வரன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் விக்னேஸ்வரனும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த குளித்தலை பெரியார் நகரை சேர்ந்த முகமதுமுஸ்தக் (24), திவாகர் (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் விக்னேஸ்வரன் மேல்சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முகமதுமுஸ்தக் குளித்தலை அரசு மருத்துவமனையிலும், திவாகர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.