பாதவிநாயகர் கோவில் முன்பு சூடம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தடை காரணமாக பாதவிநாயகர் கோவில் முன்பு பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபட்டனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு திருவிழா மட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் தற்போது வாரத்தின் 3 நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு) தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக தொடர் விடுமுறை என்பதால் நேற்று பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகம் காணப்பட்டது.
குறிப்பாக கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துவிட்டு பழனி வழியாக ஊர் திரும்பிய பக்தர்கள் பழனிக்கு வந்தனர். ஆனால் சாமி தரிசன தடையால் பழனி முருகன் கோவில் நுழைவு வாயிலில் உள்ள பாதவிநாயகர் கோவில் முன்பும், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோவில் முன்பும் பக்தர்கள் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
Related Tags :
Next Story