இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு


இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 12 Sept 2021 10:42 PM IST (Updated: 12 Sept 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, பகத்சிங் பஸ்நிலையம் முன்பு அவரது உருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி, முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், சாத்தான்குளம் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர், திருச்செந்தூர் தொகுதி அமைப்பாளர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story