ராணிப்பேட்டை மாவட்டத்தில் 630 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 630 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகம் நடந்தது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 630 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகம் நடந்தது. முகாம்களை கண்காணிப்பு அலுவலர் மற்றும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 630மையங்கலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. மேல்விஷாரம் ஹக்கீம் மெட்ரிகுலேஷன் பள்ளி, புரான்சா மேடு தொடக்கப்பள்ளி, ஆற்காடு பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆற்காடு நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாமினை கண்காணிப்பு அலுவலரும், மீன்வளத் துறை கூடுதல் ஆணையருமான சஜ்யன்சிங் ஆர்.சவான், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது உடல் பிரச்சினை உள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்த பின்னர் தடுப்பூசி செலுத்தப்படுகின்றதா என்பதை உறுதி செய்தனர். பின்னர் தடுப்பூசி கையிருப்பு குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் விளாப்பாக்கம், திமிரி, கலவை பேரூராட்சிகள், காவேரிப்பாக்கம் வாலாஜா, நெமிலி போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களின் தகவல் பதிவேடுகளை முறையாக பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தாசில்தார்கள் ஆனந்தன், கோபாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர்கள் திருமால்செல்வம், ஜெயராமன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
சோளிங்கர்
சோளிங்கர் பேரூராட்சி பகுதியில் 14 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பஸ் நிலையத்தில் நடைப்பெற்ற முகாமை சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் ஆய்வு செய்தார். காங்கிரஸ் வழக்கறிஞர் தனசேகரன், நகர துணைத்தலைவர் பட்டறை மணி சோளிங்கர் ஒன்றிய செயலாளர் கார்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
கொண்டபாளையத்தில் நடைப்பெற்ற முகாமை வேலூர் மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் இளங்கோவன் ஆய்வு செய்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி, இளநிலை உதவியாளர்கள் எபினேஷன், ஜெயராமன், துப்புரவு ஆய்வாளர் வடிவேல் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
அரக்கோணம்
அரக்கோணம் நகரில் 38 மையங்களில் தடுப்பூசி நடைபெற்றது. அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமை தாசில்தார் பழனிராஜன் மற்றும் நகராட்சி ஆணையர் ஆசிர்வாதம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தடுப்பூசி முகாம்களை நகராட்சி ஆணையர் ஆசிர்வாதம், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், அருள்தாஸ், களபணி ஆய்வாளர் ஸ்ரீகாந்த் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சுமார் 1388 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜோதி நகரில் அரக்கோணம் நகராட்சி, ரத்தினகுமாரி என்ஜினீயரிங் ஒர்க்ஸ் மற்றும் ஜே.எஸ்.ஆர். எண்டர்பிரைசஸ் சார்பில் முப்பெரும் தேவியர் கோவில் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை ஜே.எஸ்.ஆர். எண்டர்பிரைசஸ் சதீஷ் குமார் மற்றும் ரத்தினகுமாரி என்ஜினீயரிங் ஒர்க்ஸ் ஆனந்த குமார், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் மாலை 6 மணிவரை 62 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story