மாவட்ட செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்ஒரே நாளில் 33 பேர் டிஸ்சார்ஜ்நெல்லை, செப்.13- + "||" + 33 discharged in one day

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்ஒரே நாளில் 33 பேர் டிஸ்சார்ஜ்நெல்லை, செப்.13-

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்ஒரே நாளில் 33 பேர் டிஸ்சார்ஜ்நெல்லை, செப்.13-
ஒரே நாளில் 33 பேர் டிஸ்சார்ஜ்
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 578-ஆக உயர்ந்துள்ளது. இதில் 48 ஆயிரத்து 31 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 116 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 
தென்காசி மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 26 ஆயிரத்து 617 பேர் வீடு திரும்பி உள்ளனர். 75 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 ஆயிரத்து 615 ஆக உள்ளது. நேற்று 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை 55 ஆயிரத்து 100 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 115 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.