மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கலெக்டர் வெளியிட்டார் + "||" + Draft polling list

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கலெக்டர் வெளியிட்டார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கலெக்டர் வெளியிட்டார்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டார்.
வரைவு வாக்குச்சாவடி பட்டியல் 
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார். அப்போது கலெக்டர் பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி 100 சதவீதம் சரிபார்ப்பு பணி கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி முதல் இந்த மாதம் 10-ந் தேதி வரை நடந்தது. 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள 9 வாக்குச்சாவடிகள் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் பழுதடைந்த 16 வாக்குச்சாவடிகள் கட்டிடம், இடம் மாற்றம் செய்யப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்யப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஆட்சேபனைகள் 
மேலும், மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,863 வாக்குச்சாவடிகள் உள்ளன. தற்போது கூடுதலாக 9 வாக்குச்சாடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், அரசியல் கட்சி பிரமுகர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் அல்லது சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகத்திற்கு ஒருவார காலத்திற்குள் மனு செய்யலாம். 
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ், உதவி கலெக்டர்கள் நிஷாந்த் கிருஷ்ணா (ஓசூர்), சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), அரசியல் கட்சி பிரமுகர்கள் ராமமூர்த்தி (தி.மு.க.), நந்தகுமார் (அ.தி.மு.க.), கோபால் (காங்கிரஸ்), அன்பரசன் (பா.ஜனதா), சந்திரமோகன் (தேசியவாத காங்கிரஸ்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), நஞ்சுண்டன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்; கலெக்டர் தலைமையில் நடந்தது
வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது.