அணைப்பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பு


அணைப்பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பு
x
தினத்தந்தி 14 Sept 2021 1:35 AM IST (Updated: 14 Sept 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

சேத்தூர் அருகே உள்ள அணைப்பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

தளவாய்புரம், 
தளவாய்புரம், செட்டியார்பட்டி பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பா.ஜனதா கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 32 விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இவர்கள் இந்த சிலைகளை கரைக்க நேற்று சேத்தூர் அருகே உள்ள சாஸ்தா கோவில் அணைப்பகுதிக்கு கொண்டு சென்றனர். இவர்களுடன் தளவாய்புரம் போலீசாரும் உடன் சென்றனர். அங்கு ஒவ்வொரு சிலைகளாக கரைக்கப்பட்டது. இதில் பா.ஜனதா கட்சியின் ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் ஞானகுரு சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story