ஓடும் பஸ்சில் கண்ணாடியை உடைத்து தற்கொலைக்கு முயன்ற 4 கைதிகள்


ஓடும் பஸ்சில் கண்ணாடியை உடைத்து தற்கொலைக்கு முயன்ற 4 கைதிகள்
x
தினத்தந்தி 16 Sept 2021 12:46 AM IST (Updated: 16 Sept 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே ஓடும் பஸ்சில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கைகளை அறுத்து 4 கைதிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால், ேபாலீசாரும், சக பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

பரமக்குடி,

பரமக்குடி அருகே ஓடும் பஸ்சில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கைகளை அறுத்து 4 கைதிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால், ேபாலீசாரும், சக பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

செல்போன் கேட்டனர்

ராமநாதபுரம் மாவட்டம் நாகாச்சியை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் (வயது 25), மரவெட்டி வலசை கிராமத்தை சேர்ந்த களஞ்சியம் மகன் தினேஷ் (24), சண்முகம் மகன் மணிமாறன் (23), சங்கந்தியான் வலசை கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் திருஞானம் (23) ஆகிய 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் அவர்களை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில், ஆஜர்படுத்த மதுரை மத்திய சிறையில் இருந்து போலீசார், அரசு பஸ்சில் அழைத்து வந்தனர்.
பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் கிராமம் பகுதியில் பஸ் வந்த போது, 4 கைதிகளும் தங்களது குடும்பத்தினரிடம் பேசுவதற்காக போலீசாரிடம் செல்போன் கேட்டுள்ளனர். அதற்கு போலீசார் கொடுக்க மறுத்தனர்.
தற்கொலைக்கு முயன்ற கைதிகள்
உடனே அவர்கள் 4 பேரும் பஸ்சின் ஜன்னல் கண்ணாடியை கைவிலங்குகளால் அடித்து உடைத்தனர். பின்னர் உடைந்த கண்ணாடி பாகங்களை எடுத்து தங்களது கைகளை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அலறினார்கள். கைதிகளுடன் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே போலீசார், கைதிகளிடம் இருந்து கண்ணாடிகளை பறிக்க முற்பட்டனர். அப்போது அந்த கைதிகள் போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் நைசாக பேசி கண்ணாடிகளை கைப்பற்றினர்
.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை

பின்னர் பஸ்சில் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று கைதிகள் 4 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பரமக்குடி நகர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
பின்னர் கைதிகள் 4 பேரும் பரமக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர். ஓடும் பஸ்சில் கைதிகள் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story