பெரம்பலூரில் மனித சங்கிலி போராட்டம்
பெரம்பலூரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
பெரம்பலூர்
பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, சிறுபான்மை இயக்கங்கள், பெரியாரிய அம்பேத்கரிய முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லதுரை தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைத் தலைவரும், கந்தர்வக்கோட்டை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.வுமான சின்னதுரை கோரிக்கைகளை விளக்கி பேசினார். டெல்லி பெண் போலீஸ் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், விசாரணையின்றி சிறையில் இருக்கும் முஸ்லிம் இளைஞர்கள், முற்போக்காளர்களை விடுதலை செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும், பீமா கோரேகான் சதி வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய கோரியும், உபா என்னும் அடக்குமுறை சட்டத்தை திரும்ப பெற கோரியும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story