ஏரியூர் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு பட்டாக்கத்தியால் வெட்டு

ஏரியூர் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு பட்டாக்கத்தியால் வெட்டு விழுந்தது.
ஏரியூர்:
பெரும்பாலை ஊராட்சி பெத்தானூர் பகுதியை சேர்ந்தவர் சின்னு, விஜயா தம்பதியரின் மகன் ராஜ்குமார் என்கிற சிவா (வயது 33). பி.எஸ்சி. பட்டதாரி. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ராஜ்குமார் காளான் வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் கணேசன், முத்தம்மாள் தம்பதியரின் மகன் திவாகர் (23). உறவினர்களான இவர்களுக்கு ஏற்கனவே நிலத்தகறாறு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக சமீபத்தில் அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ராஜ்குமார் பெரும்பாலை சென்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு திரும்பியுள்ளார். அப்போது பெத்தானூர் சாலையில் ராஜ்குமாரை வழிமறித்த திவாகர் அவரை விரட்டி சென்று பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ராஜ்குமாருக்கு கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story