உள்ளாட்சி தேர்தல்: 2 நாட்களில் 3 பேர் வேட்பு மனு தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்ட உள்ளாட்ட்சி தேர்தலுக்கு 2 நாட்களில் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி நடைபெறுகிறது. அதன்படி பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 30-வது வார்டு உறுப்பினர் பதவி, நல்லூர், பின்னமங்கலம், கண்டகானப்பள்ளி ஊராட்சிகளின் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதே போல், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் காலியாக உள்ள 18 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் சூளகிரி ஒன்றியம் பி.குருபரப்பள்ளி ஊராட்சி 1-வது வார்டுக்கு ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 2-வது நாளான நேற்று சூளகிரி ஒன்றியம் தோரிப்பள்ளி ஊராட்சி 3-வது வார்டுக்கு ஒருவரும், ஊத்தங்கரை ஒன்றியம் கல்லாவி ஊராட்சி 1-வது வார்டுக்கு ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2 நாட்களில் 3 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story