மாவட்ட செய்திகள்

செப்டம்பர் 17: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + Petrol, Disel Price in Chennai on Septemper 17

செப்டம்பர் 17: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

செப்டம்பர் 17: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 12-வது நாளாக இன்றும் பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை.
சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது. 

இதற்கிடையில், சென்னையில் கடந்த 11 நாட்களாக பெட்ரோல் லிட்டர் ரூ.98.96- க்கும், டீசல் ரூ.93.26-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  

இந்நிலையில், 12-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் 100-ஐ தாண்டியது!
தொடரும் உச்சமாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.22 காசுகளுக்கு இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது என்று விவசாயிகள் மற்றும் குடும்பத்தலைவிகள் கருத்து தெரிவித்தனர்.
3. இந்தியாவில் 95% மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை - உ.பி. பாஜக மந்திரி பேச்சு
பெட்ரோல் விலை தற்போது மிகக்குறைவாக உள்ளது என்று உத்தரபிரதேச பாஜக மந்திரி தெரிவித்துள்ளார்.
4. பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை
பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.கூறினார்.
5. ஆட்டோ, மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரி ஆட்டோ, மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.