லோடு ஆட்டோவில் புகையிலை பொருட்கள் கடத்தல்; டிரைவர் கைது

லோடு ஆட்டோவில் புகையிலை பொருட்களை கடத்தி வந்ததாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
.தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் மற்றும் தனிப்படையினர் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி, பணிக்கநாடார் குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டினர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தினர்.
விசாரணையில், டிரைவர் கோவை மாவட்டம் உடையம்பாளையம் பகுதியை சேர்ந்த சுடலைமணி (வயது 46) என்பதும், அதில் 264 கிலோ எடை கொண்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கோவையில் இருந்து பணிக்கநாடார் குடியிருப்பு மேற்கு தெருவைச் சேர்ந்த தங்கதுரை மகன் மகேஷ்வரன் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சுடலைமணியை கைது செய்து, அவர் கடத்தி வந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மகேஷ்வரனை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story