பாலாற்றில் மூழ்கிய வாலிபரை தேடும் பணி தீவிரம்
பாலாற்றில் மூழ்கிய வாலிபரை தேடும் பணி தீவிரம்
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 24). இவர் செல்போன் டவரில் பணியாற்றி வந்தார். ராகேஷ் நேற்று சாமியார்மடம் அருகே உள்ள பாலாற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது திடீரென நீரில் ராகேஷ் மூழ்க தொடங்கியுள்ளார். இதைப்பார்த்த நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் பாலாற்றில் மூழ்கிய ராகேசை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story