மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
அரக்கோணம்
அரக்கோணத்தை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சார்ந்த ரங்கநாதன் மகன் ராஜ்குமார் (வயது 38). எலக்ட்ரீசியன். நேற்று மாலை வடமாம்பாக்கம் கண்டிகை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ராஜ்குமார் வயரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டின் அருகே அறுந்து கிடந்த கேபிள் வயரை அவர் தூக்கி வீசியபோது, மின்கம்பத்தில் இருந்த மின்சார வயர் மீது பட்டதில் கேபிள் வயரை பிடித்திருந்த ராஜ்குமார் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார், ராஜ்குமார் உடலை கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story