காரைக்காலில் 2 பேர் கொரோனாவுக்கு பலி


காரைக்காலில் 2 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 22 Sept 2021 10:37 PM IST (Updated: 22 Sept 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். புதிதாக 117 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி, செப்.
காரைக்காலில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். புதிதாக 117 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
2 பேர் பலி 
புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 907 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 117 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 735 ஆக உயர்ந்துள்ளது. 
தற்போது ஆஸ்பத்திரிகளில் 142 பேர், வீடுகளில் 803 பேர் என 945 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 
9 லட்சம் தடுப்பூசிகள் 
அதாவது காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திருநள்ளாறை சேர்ந்த 52 வயது பெண், காமராஜ் நகரை சேர்ந்த 75 வயது முதியவர் ஆகியோர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,834 ஆக உயர்ந்துள்ளது. 
புதுவையில் தொற்று பாதிப்பு 2.30 சதவீதமாகவும், உயிரிழப்பு 97.79 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல்கட்ட தடுப்பூசியை 2 ஆயிரத்து 861 பேரும், 2&வது கட்ட தடுப்பூசியை 6 ஆயிரத்து 70 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 9 லட்சத்து 32 ஆயிரத்து 694 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

Next Story