கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் நகை-பணம் திருட்டு - போலீஸ் விசாரணை

சிங்கப்பெருமாள்கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் நகை-பணம் திருடிய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த பெரிய செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்பின் (வயது 47). இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் கதவை திறந்தவாறு தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை திறந்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு கிராம நிர்வாக அதிகாரி ஜோஸ்பின் எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 7½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.27 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story