அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் கைது


அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Sept 2021 9:24 PM IST (Updated: 25 Sept 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். 

அரிவாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கச்சேரி தளவாய்புரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி மகன் கலைச்செல்வன் (வயது 20). இவர் கடந்த 19&ந் தேதி தன்னுடைய பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது, இருசக்கர வாகனத்தின் சீட்டில் கேக்கை வைத்து அதை அரிவாளால் வெட்டிக் கொண்டாடினார்.

இதனை செல்போனிலும் வீடியோவாக எடுத்து வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், துணை சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில், ஓட்டப்பிடாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் கலைச்செல்வனை போலீசார் கைது செய்து செய்தனர். அவரிடம் இருந்து 5 அரிவாள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது பொது அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு கைதாகும் இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Next Story