சகதி காடாய் மாறிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர் கே.வி.கே. கார்டன் பகுதியில் உள்ள சாலை குப்பை மற்றும் கழிவு நீருடன் சகதி காடாய் மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் வாகனங்களை ஓட்டி செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர்
திருப்பூர் கே.வி.கே. கார்டன் பகுதியில் உள்ள சாலை குப்பை மற்றும் கழிவு நீருடன் சகதி காடாய் மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் வாகனங்களை ஓட்டி செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.
சகதி காடு
திருப்பூர் காலேஜ் ரோடு முருங்கப்பாளையம் இட்டேரி சாலையில் இருந்து கே.வி.கே. கார்டன் சாலை செல்கிறது. இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் தற்போது சாலையில் சிறிய பள்ளம் வெட்டப்பட்டு அதன் வழியாக கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் சாலை முழுவதும் சேறும், சகதியும் நிறைந்து சகதி காடாக இந்த சாலை காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் இவ்வழியாக வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி சேற்றில் விழுகின்றனர்.
சாலையில் குப்பை
ஏற்கனவே இந்த சாலை மோசமாக உள்ள நிலையில் சாலை முழுவதும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இட வசதியின்றி வாகனங்களை ஓட்டி செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இதேபோல் பாதசாரிகளும் சகதி காடாய் உள்ள இந்த சாலையில் தட்டுத்தடுமாறியபடி நடந்து செல்கின்றனர். இந்த பகுதியில் குடியிருப்புகள் மற்றும் பனியன் நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த சாலையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். அப்படியிருந்தும் சாலையை சீரமைக்காமல் இருப்பது இப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்த சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?.
Related Tags :
Next Story