மாவட்டத்தில் மேலும் 183 ரவுடிகள் கைது


மாவட்டத்தில் மேலும் 183 ரவுடிகள் கைது
x

மாவட்டத்தில் மேலும் 183 ரவுடிகள் கைது

சேலம், செப்.26-
சேலம் மாவட்டத்தில் 2&வது நாளாக நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 183 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
ரவுடிகள்
தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், இதன் காரணமாக பழைய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை கைது செய்யுமாறும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகளை கண்டறிந்து அவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். 
சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா மற்றும் புறநகர் பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோரின் உத்தரவின்பேரில் அந்தந்த பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் விடிய, விடிய சோதனை மேற்கொண்டு ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகளை கைது செய்தனர். சேலம் மாநகரில் 72 பேரும், மாவட்டத்தில் 75 பேரும் என மொத்தம் 147 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
183 பேர் கைது
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 2-வது நாளாக சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், சேலம் மாநகர பகுதியில் 44 ரவுடிகளும், மாவட்ட பகுதிகளில் 139 ரவுடிகளும் என மொத்தம் 183 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2 நாட்களாக நடந்த சோதனையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பழைய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் 330 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story