கொரோனா தடுப்பூசி


கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 26 Sep 2021 6:11 PM GMT (Updated: 26 Sep 2021 6:11 PM GMT)

60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 300 முகாம்களில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
தடுப்பூசி முகாம் 
தமிழகம் முழுவதும் 3&வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் 300 முகாம்களில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடவேண்டும் என்ற இலக்குடன் தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம்களின் மூலம் மொத்தம் 60 ஆயிரத்து 865 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 35 ஆயிரத்து 31 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 25 ஆயிரத்து 834 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
சேத்தூர் பஸ் நிலையம் அருகில், வடுகாயர் சாவடி ஆகிய இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 500&க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசிகளை போட்டு கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சேத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் அசோக் குமார், வட்டார மருத்துவ அலுவலர் கருணாகர பிரபு, பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் செய்திருந்தனர்.
வத்திராயிருப்பு 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கான்சாபுரம், கூமாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் ஆண்கள், பெண்கள் என ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டனர். இந்த தடுப்பூசி முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன் தலைமையிலான சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்கள்.

Next Story