பனியன் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 8 வது கட்ட பேச்சுவார்த்தை

பனியன் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 8 வது கட்ட பேச்சுவார்த்தை திருப்பூரில் இன்று நடைபெறுகிறது.
திருப்பூர்
பனியன் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 8 வது கட்ட பேச்சுவார்த்தை திருப்பூரில் இன்று நடைபெறுகிறது.
சம்பள உயர்வு
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்களுக்கு விடுமுறை தினமாகும். இந்த தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி சம்பளம் வழங்கப்படுகிறது.
பனியன் தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இருதரப்பினரும் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கும் சம்பளம் ஒப்பந்தப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு, புதிய சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கத்தினர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 7வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தை
பனியன் தொழிற்சங்கத்தினர் சார்பில் 90 சதவீத சம்பள உயர்வு வேண்டும் என கேட்கப்பட்டது. ஆனால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் 28 சதவீதம் வரை உயர்த்தி வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் இதற்கு தொழிற்சங்கத்தினர் சம்மதிக்கவில்லை. இதனால் 8வது கட்ட பேச்சுவார்த்தை இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சைமா சங்க அலுவலகத்தில் நடைபெறுகிறது.
-----
Related Tags :
Next Story