சொத்து தகராறில் வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது

மன விரக்தி அடைந்த கார்த்திக் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது பெரியம்மா கவுரி, பாஸ்கர் மற்றும் தாய்மாமன் சங்கர் ஆகியோர் காரணம் என செல்போனில் வீடியோ எடுத்து உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.
சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் தனகோட்டி ராஜா தெருவில் வசித்து வந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் கடந்த 22-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கார்த்திக் தாயார் சாந்தி கிண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில், கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், இறந்து போன கார்த்திக்கின் தந்தை அந்தோணிதாஸ், கவுரி என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு பாஸ்கர் என்ற மகன் பிறந்த நிலையில், கவுரியின் தங்கை சாந்தி என்பவரை அந்தோணிதாஸ்,2-வது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து சாந்திக்கு கார்த்திக் உட்பட 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் என 4 குழந்தைகள் பிறந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பாஸ்கர் காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வரும் நிலையில், அவரது தாயார் கவுரி மற்றும் தாய்மாமன் சங்கர் ஆகியோருடன் சேர்ந்து தனது தந்தை அந்தோணிதாசின் சொத்துக்கள் தனக்கு மட்டும் தான் உரிமை எனக்கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாக தெரிகிறது.இதனால் மன விரக்தி அடைந்த கார்த்திக் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது பெரியம்மா கவுரி, பாஸ்கர் மற்றும் தாய்மாமன் சங்கர் ஆகியோர் காரணம் என செல்போனில் வீடியோ எடுத்து உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். இந்தநிலையில், வழக்கை சந்தேக மரண வழக்காக பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக பாஸ்கர் (32), சங்கர் (61) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான கவுரி என்பவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story