தடுப்பூசி செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்க கலெக்டர் உத்தரவு

தடுப்பூசி செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்க கலெக்டர் உத்தரவு
திருப்பத்தூர்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் பேசியதாவது:-
மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொது மக்களின் ஆதார் எண்ணை பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா என்பதை கண்டறிந்து செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நிரந்தர கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் குழு அனைத்து பகுதிகளுக்கும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து தடுப்பூசி செலுத்தாதவர்களின் பட்டியல் தயார் செய்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும் அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களின் வாயிலாக தினமும் 20 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story