நாசரேத்தில் பெண்ணிடம் 10½ பவுன் நகையை பறித்த வாலிபர் கைது


நாசரேத்தில் பெண்ணிடம் 10½ பவுன் நகையை பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2021 9:50 PM IST (Updated: 5 Oct 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் பெண்ணிடம் 10½பவுன் நகைகயை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

நாசரேத்:
நாசரேத் பேராலய தெருவை சேர்ந்தவர் ராஜாசிங். இவர் டாடா நிறுவனத்தில் வேலை பார்த்து  ஓய்வு பெற்றுள்ளாா். இவரது மனைவி சரோஜினி (வயது 67). இவர் நேற்று வாரச்சந்தையில் காய்கறிகள் மற்றும் பொருட்களை வாங்கிவிட்டு லுாக்கா மருத்துவமனை நோக்கி நடந்து வந்துள்ளார். அப்பொழுது எதிரே வந்த மர்மநபர் சரோஜினி இடம் விலாசம் கேட்பதுபோல பேச்சுக் கொடுத்துள்ளார். திடீரென்று அந்த மர்ம நபர் சரோஜினியின் கழுத்தில் அணிந்திருந்த 10½ பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். பதறிப்போன சரோஜின் கூச்சல் போட்டவுடன், அக்கம் பக்கத்தினர் திரண்டு அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து  நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். இதில் அவர் ஆறுமுகநேரியை சேர்ந்த பெருமாள் மகன் முத்துவை (வயது 39) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, நகையை அவரிடம் இருந்து மீட்டனர்.

Next Story