தாம்பரம் அருகே தண்டவாளத்தில் விரிசல் - சென்னை வரும் ரெயில்கள் தாமதம்

தாம்பரம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால், சென்னை வரும் ரெயில்கள் தாமதமானது.
சென்னை,
தாம்பரம் அருகே இரும்புலியூரில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால், வெளியூரில் இருந்து சென்னை வரும் ரெயில்கள் தாமதமானது. இன்று அதிகாலை காலை 4.45 மணியளவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரெயில்வே அதிகாரிகள் உரிய நேரத்தில் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, வெளியூரில் இருந்து சென்னை வரும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரெயில்வே அதிகாரிகள் 5.25 மணியளவில் சரிசெய்தனர். இதனை தொடர்ந்து வெளியூரில் இருந்து சென்னை வரும் ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
மேலும், சில ரெயில்கள் மாற்று தண்டவாளம் வழியாக இயக்கப்பட்டன. இதனால், வெளியூரில் இருந்து சென்னை வரும் ரெயில்கள் காலதாமதமாக வந்தது.
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட போதும் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையேயான ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story