ஜனநாயக அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

முத்தையாபுரத்தில் ஜனநாயக அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்பிக்நகர்:
உத்திரப்பிரதேசத்தில் நடந்த விவசாயிகள் படுகொலையை கண்டித்து முத்தையாபுரம் தோப்பு பஜாரில் ஜனநாயக அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புறநகர் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் மாநில பேச்சாளர் அப்துல் மஜீத் பேசினார். தமிழர் வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பூமயில், காங்கிரஸ் மாநகர துணை தலைவர் பிரபாகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story