வாக்குச்சாவடி வளாகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் தள்ளுமுள்ளு


வாக்குச்சாவடி வளாகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 6 Oct 2021 7:17 PM GMT (Updated: 6 Oct 2021 7:17 PM GMT)

ராணிப்பேட்டை அருகே சிப்காட் பகுதியில் வாக்குச்சாவடி மையத்துக்குள் இருந்தவர்களிடம், குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டுப்போட சொன்னதால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையை தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே சிப்காட் பகுதியில் வாக்குச்சாவடி மையத்துக்குள் இருந்தவர்களிடம், குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டுப்போட சொன்னதால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையை தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தள்ளுமுள்ளு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. ராணிப்பேட்டை அருகே உள்ள சிப்காட் அரசினர் உயர்நிலைப்பள்ளியில், நவ்லாக் ஊராட்சிக்கான வாக்குச்சாவடி மையம் உள்ளது. 

இந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவின்போது, ஜன்னல் வழியாக, ஒரு தரப்பினர், வாக்காளர்களிடம், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்கு செலுத்துமாறு கேட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் இப்பகுதியில் பேனர் வைத்து உள்ளதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே வாக்குச்சாவடி மைய வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கலெக்டர் ஆய்வு

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே அனுப்பி வைத்தனர். 

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இந்த மையத்தையும், புதிய அக்ராவரத்தில் ஸ்ரீ விஜய் வித்யாலயா மழலையர் பள்ளி வாக்குச்சாவடி மையத்தையும் நேரில் ஆய்வு செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 

போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யனும் சிப்காட் அரசினர் உயர்நிலைப்பள்ளி வாக்கு சாவடி மையத்தை நேரில் ஆய்வு செய்தார்.

Next Story