தொழிலாளி வீட்டில் நகை திருட்டு


தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
x
தினத்தந்தி 7 Oct 2021 3:29 AM IST (Updated: 7 Oct 2021 3:29 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

திசையன்விளை:
திசையன்விளை மேல பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் வெட்டும் பெருமாள் (வயது 42). முடி திருத்தும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் தனது குடும்பத்தினருடன் லட்சுமி நகரில் உள்ள தசரா பிறையில் சாமி கும்பிட சென்றார். பின்னர் நள்ளிரவில் திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2½ பவுன் தங்க சங்கிலி மற்றும் ஒரு ஜோடி கம்மலை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிவி பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story