தபால் வாக்கு படிவம் வழங்கக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


தபால் வாக்கு படிவம் வழங்கக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2021 10:50 PM IST (Updated: 7 Oct 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

தபால்வாக்கு படிவம் வழங்கக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் கே.வி.குப்பம் வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கே.வி.குப்பம்

தபால்வாக்கு படிவம் வழங்கக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் கே.வி.குப்பம் வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

குடியாத்தம் ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பணியில் 151 அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இவர்களுக்கு தபால் ஓட்டுகள் அறிவிக்கப்பட்டபடி வழங்கப்படவில்லை. இதற்காக கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேற்று தபால் வாக்குப் படிவம் கேட்க வந்தனர். அப்போது அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லை. 

இதனால் அங்கன்வாடி பணியாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். 
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

தபால் வாக்குப்படிவம்

நாங்கள் கே.வி.குப்பம் பகுதி அங்கன்வாடி பணியாளர்கள். நாங்கள் வாக்களிக்க வசதியாக தபால் வாக்குகள் வழங்கப்படும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. அதன்படி எங்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் வாக்களிக்கவும் அனுமதிக்கவில்லை. எனவே, எங்களுக்கு தபால் ஓட்டு வழங்கக்கோரி உள்ளிருப்புப் போராட்டம் செய்து வருகிறோம் என்றனர்.

கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, சப்-இன்ஸ்பெக்டர் குமாரசாமி உள்ளிட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்தனர். மாலை 5 மணியளவில் வட்டார வளர்ச்சி அலுவலரும் தேர்தல் அதிகாரியுமான இ.கோபி தபால் ஓட்டுகளுக்கான படிவங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து தபால் வாக்கு படிவங்களை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வழங்கி கலைந்து சென்றனர்.

Next Story