மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் மண்டல இயக்குனர் பேச்சு
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் உரிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக மண்டல இயக்குனர் காமராஜ் தர்மபுரியில் கூறினார்.
தர்மபுரி:
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் உரிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக மண்டல இயக்குனர் காமராஜ் தர்மபுரியில் கூறினார்.
மத்திய அரசின் திட்டங்கள்
மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் சார்பில் நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர விழா கொண்டாட்டம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் தர்மபுரி கடகத்தூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கம், கொரோனா தடுப்பு உள்ளிட்ட திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் (பயிற்சி) கவுரவ்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு, புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக மண்டல இயக்குனர் காமராஜ் பங்கேற்று விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய அரசின் மக்கள் நல வளர்ச்சி திட்டங்கள் குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 மக்கள் தொடர்பு கள அலுவலகங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் 30 நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்று அந்த திட்டத்தின் பயன்களை அடையவேண்டும்.
பன்முக கலாசாரம்
மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கம் மூலம் பல்வேறு வரலாற்று புகழ்பெற்ற இடங்கள் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நம் நாட்டின் பன்முக கலாசாரத்தை வலுபடுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்புகளை மற்ற மாநிலத்தவர்கள் அறியும் வகையில் ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம், களவிள விளம்பர அலுவலர் பிபின்நாத், ஊராட்சி மன்ற தலைவர் ஐவண்ணன், கள விளம்பர உதவியாளர் வீரமணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story