ஆட்கொல்லி புலியை தேடும் பணி 14-வது நாளாக தோல்வி

மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் ஆட்கொல்லி புலியை தேடும் பணி 14-வது நாளாக தோல்வியடைந்தது.
கூடலூர்
மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் ஆட்கொல்லி புலியை தேடும் பணி 14-வது நாளாக தோல்வியடைந்தது.
தேடுதல் வேட்டை தோல்வி
நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் 14-வது நாளாக ஆட்கொல்லி புலியை தேடும் பணி நேற்று நடைபெற்றது. இதில் வனத்துறையினர் மற்றும் கேரள வன அதிரடிப்படையினர் ஈடுபட்டனர். ஆனால் புலி குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதனால் தேடுதல் வேட்டை தோல்வியடைந்தது. மேலும் வனப்பகுதியில் பொருத்திய கேமராக்களிலும் புலி உருவம் பதிவாகவில்லை. இதனால் வனத்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.
ஆரம்பத்தில் தேடுதல் வேட்டையில் கூடலூர், முதுமலை மற்றும் கேரள வனத்துறையினர் என மொத்தம் 130 பேர் ஈடுபட்டனர். மனிதர்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், பிற வனவிலங்குகளின் நடமாட்டம் குறைந்து வருகிறது.
கூடுதல் கேமராக்கள்
இதனால் நேற்று 70 பேர் மட்டுமே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் மசினகுடி-முதுமலை எல்லையில் அதிரடிப்படை மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
இதற்கிடையில் 4 மணியளவில் மாயார் பகுதியில் மாட்டை புலி அடித்து கொன்றதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக வனத்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குனர் அருண்குமார் கூறும்போது, வனப்பகுதியில் உள்ள கேமராவில் 2 புலிகளின் உருவம் பதிவானது. ஆனால் அவை தேடப்படும் ஆட்கொல்லி புலி இல்லை.
பின்னர் சிங்காரா செல்லும் சாலை, ஸ்விட்ச் சாலையில் இடது மற்றும் வலது பக்கங்கள், ஜே.டி. சாலை மற்றும் உப்புபள்ளம் ஆகிய பகுதிகளில் கூடுதலாக 25 கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது என்றார்.
Related Tags :
Next Story