தெப்பக்குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை


தெப்பக்குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2021 8:49 PM GMT (Updated: 11 Oct 2021 8:49 PM GMT)

அங்கன்வாடி மையம் அருகே உள்ள தெப்பக்குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேச மக்கள் முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

விருதுநகர், 
அங்கன்வாடி மையம் அருகே உள்ள தெப்பக்குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேச மக்கள் முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. 
தெப்பக்குளம் 
தேச மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பாரதிராஜா கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 
குல்லூர்சந்தையில் அங்கன்வாடி மையம் அருகே ஊர் பொது தெப்பக்குளம் உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இந்த குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் அல்லது கம்பி வேலி  அமைக்க வேண்டும்.
அதேபோல கன்னிசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு தேவையான மருந்துகள் வழங்கவும், ஸ்கேன் கருவி வழங்கவும், மருத்துவமனைக்கு மருத்துவர்களை நியமனம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். 
மண்பாண்ட தொழிலாளர்கள் 
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் (குலாளர்) சங்கத்தினர் மாநிலத்தலைவர்.சோம.நாராயணன் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 
செங்கல் சூளை வைப்பவர்கள் 1.5 மீட்டர் அளவு வரை சுற்றுச்சூழல் அனுமதி இன்றி மண் எடுத்துக் கொள்ள அனுமதித்துள்ளநிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் தற்போது செங்கல்செறுகு ஓடு செய்வதற்கு ஏற்ற களிமண்ணை எடுத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.
பயிர் காப்பீடு 
தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய பயிர் அடங்கல் கிராம நிர்வாக அதிகாரி மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை கிடைக்காத நிலையில் உடனடியாக காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story