மாவட்ட செய்திகள்

ஒரு வாக்கு வித்தியாசத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றிய வேட்பாளர் + "||" + Panchayat leader

ஒரு வாக்கு வித்தியாசத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றிய வேட்பாளர்

ஒரு வாக்கு வித்தியாசத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றிய வேட்பாளர்
திருச்சி அருகே உள்ள சிறுமருதூர் பஞ்சாயத்து தலைவர் பதவியை, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் ஆர்.கடல்மணி கைப்பற்றினார்.
திருச்சி, அக்.13-
திருச்சி அருகே உள்ள சிறுமருதூர் பஞ்சாயத்து தலைவர் பதவியை, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் ஆர்.கடல்மணி கைப்பற்றினார்.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
திருச்சி மாவட்டத்தில் லால்குடி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுமருதூர் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.கடல்மணி 424 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக ர.கன்னியம்மாள் 423 வாக்குகள் பெற்று, வெற்றி வாய்ப்பை இழந்தார். இருவரின் வெற்றி, தோல்வியை ஒரே ஒரு வாக்கு முடிவு செய்துள்ளது.

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அரசியல் கட்சி சின்னம் கிடையாது என்றாலும், சுயேச்சையாக போட்டியிட்ட இருவரும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான எம்.சத்தியநாதன் 137 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து டெபாசிட் தொகையையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. சிறுமருதூர் பஞ்சாயத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,150 ஆகும். பதிவான வாக்குகள் 989. செல்லத்தக்க வாக்குகள் 984. செல்லாத வாக்குகள் 5 ஆகும்.
கடந்த முறை...
சிறுமருதூர் கிராம பஞ்சாயத்துக்கு கடந்த முறை நடந்த தேர்தலில், தற்போது வெற்றி வாய்ப்பை இழந்த கன்னியம்மாளின் கணவர் ரமேஷ்குமாரிடம், கடல்மணி வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இதனிடையே, ரமேஷ்குமார் உயிரிழந்ததையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ரமேஷ்குமாரின் மனைவி கன்னியம்மாளை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வென்றுள்ளார் கடல்மணி. அதாவது கணவரிடம் தோல்வியை தழுவியவர், அவரது மனைவியிடம் வெற்றி பெற்றுள்ளார்.
கீழரசூர் பஞ்சாயத்துதலைவர்
இதேபோல், புள்ளம்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட கீழரசூர் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ம.ராஜேந்திரன் 613 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக மு.கோவிந்தசாமி 553 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். மேலும் வேட்பாளர் ரவிச்சந்திரன் 483 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இன்னொரு வேட்பாளரான சத்தியராஜ் 35 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் தொகையையும் இழந்தார்.
கீழரசூர் பஞ்சாயத்தில் மொத்த வாக்காளர்கள் 2,029. பதிவான வாக்குகள் 1,692. செல்லத்தக்க வாக்குகள் 1,684. செல்லாதவை 8.