மாவட்ட செய்திகள்

பர்கூர் அருகேகட்டிட மேஸ்திரி கழுத்தை அறுத்து கொலைமனைவி போலீசில் சரண் + "||" + Architect strangled to death

பர்கூர் அருகேகட்டிட மேஸ்திரி கழுத்தை அறுத்து கொலைமனைவி போலீசில் சரண்

பர்கூர் அருகேகட்டிட மேஸ்திரி கழுத்தை அறுத்து கொலைமனைவி போலீசில் சரண்
பர்கூர் அருகே கட்டிட மேஸ்திரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி போலீசில் சரண் அடைந்தார்.
பர்கூர்:
பர்கூர் அருகே கட்டிட மேஸ்திரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி போலீசில் சரண் அடைந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கட்டிட மேஸ்திரி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மலர் (37). இவர்களுக்கு ரத்தினவேல் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். சத்யாவிற்கும், அவரது அத்தை மகனுக்கும் திருமணம் நடைபெற்றது. 
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சத்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு அவர் பெற்றோருடன் இருந்து வந்தார். மகள் கணவர் வீட்டில் இருந்து வந்ததால் மாதேஷ் ஆத்திரத்தில் இருந்தார்.
கழுத்தை அறுத்து கொலை
தனது அக்காள் மகனுடன் திருமணம் செய்து வைத்துள்ள நிலையில் மகள் இப்படி வந்து விட்டாளே என கோபத்தில் இருந்த மாதேஷ் நேற்று முன்தினம் இரவு மனைவி, மகளுடன் தகராறு செய்தார். காலையில் கணவர் வீட்டிற்கு நீ செல்ல வேண்டும் என்று மகளிடம் கூறினார். பின்னர் அவர், மனைவி மற்றும் மகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கணவர் மீது கோபத்தில் இருந்த மலர் ஆத்திரத்தில் இரவில்  வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாதேசின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின்னர் அவர் பர்கூர் போலீசில் சரண் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாதேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
இந்த கொலை தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
பர்கூரில் குடும்ப தகராறில் கணவரை மனைவியே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
---