மனைவியை கொன்று விவசாயி தற்கொலை


மனைவியை கொன்று விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 17 Oct 2021 3:13 AM IST (Updated: 17 Oct 2021 3:13 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தஞதகராறில் மனைவியை கொன்ற விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வல்லம்;
குடும்பத்தஞதகராறில் மனைவியை கொன்ற விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
விவசாயி
தஞ்சை அருகே உள்ள வளம்பக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர்  கிருஷ்ணமூர்த்தி(வயது 52). விவசாயி. இவருடைய மனைவி ராசாத்தி( 44). இவர்களுக்கு ஒரு மகளும், பாலமுருகன்(22), பாரதி(20) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் மகளுக்கு திருமணமாகி விட்டது.  பாலமுருகன், பாரதி ஆகிய இருவரும் வளம்பக்குடி அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு டீ, பலகாரம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். 
கிருஷ்ணமூர்த்திக்கும் அவரது மனைவி ராசாத்திக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 
தூக்கில் பிணம்
இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தியின் மகன்கள் இருவரும் டீ விற்பனை செய்ய வீட்டில் இருந்து வெளியில் சென்றனர். பின்னர் கிருஷ்ணமூர்த்தியின் இளைய மகன் பாரதி வீட்டுக்கு திரும்பி வந்து வீட்டின் கதவை தட்டினார். வெகு நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக அவர் உள்ளே பார்த்தார். 
அப்போது வீட்டுக்குள் கிருஷ்ணமூர்த்தி தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். 
மனைவி கொலை
அப்போது வீட்டின் நடுவே ராசாத்தி முகத்தில் சில காயங்களுடன்  பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். 
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கணவன்-மனைவி இடையேயான தகராறில் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி ராசாத்தியை கொன்று தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்பத்தகராறில் மனைவியை கொன்று விட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.  

Next Story