குற்றாலத்தில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு
குற்றாலத்தில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பகல் முழுவதும் லேசான மழை விட்டு விட்டு பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மிதமான மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் சற்று குறைந்தது.எனினும் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு நேற்று 2-வது நாளாக நீடித்தது. அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story