அரக்கோணம் அருகே குளிக்க சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி

குளிக்க சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி
அரக்கோணம்
அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன், கூலி தொழிலாளி. இவரது மகன் லோகேஷ் (வயது 13). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சனிக்கிழமை அன்று லோகேஷ் அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டுள்ளான். நீண்ட நேரமாகியும் லோகேஷ் வீட்டிற்கு வராததால் பெற்றோர் பல இடங்களில் தேடி வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஆற்றின் கரையின் அருகே லோகேஷ் பிணமாக கிடந்ததுதெரியவந்தது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story