சேலம் வழியாக ரெயிலில் கடத்திய வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்


சேலம் வழியாக ரெயிலில் கடத்திய வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
x

சேலம் வழியாக ரெயிலில் கடத்திய வெளிமாநில மதுபாட்டில்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூரமங்கலம்,
மதுபாட்டில்கள் கடத்தல்
கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலம் வழியாக ரெயில்களில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் கர்நாடகாவில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் அடிக்கடி ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மைசூருவில் இருந்து தூத்துக்குடி சென்ற சிறப்பு ரெயில் நேற்று அதிகாலை சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்தது.
இதையடுத்து அந்த ரெயிலில், ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ரெயிலில் எஸ்-2 பெட்டியில் உள்ள கழிவறையில் 4 பைகள் இருந்தன. அந்த பைகளை போலீசார் பிரித்து பார்த்தனர். அப்போது அந்த பைகளில் 66 மதுபாட்டில்கள் மற்றும் 401 மதுபாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது மொத்தம் 84 லிட்டர் ஆகும். இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இந்த மதுபாட்டில்களை கடத்தி வந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து அந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பெங்களூருவில் இருந்து அந்த மதுபானம் கடத்தி வந்ததும், தர்மபுரியில் இருந்தே மதுபாட்டில்கள் இருந்த கழிவறை பூட்டியே கிடந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெயிலில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story