திண்டிவனம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்; 4 பேர் கைது 2 பெண்கள் மீட்பு


திண்டிவனம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்; 4 பேர் கைது 2 பெண்கள் மீட்பு
x
தினத்தந்தி 19 Oct 2021 10:00 PM IST (Updated: 19 Oct 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசார தொழிலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மானூர் சக்கரபாணி நகர் பகுதியில் ஒரு வீட்டில் வைத்து விபசாரம் நடப்பதாக திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டை அவர்கள் சோதனை செய்தனர்.

பெண்களை வைத்து விபசாரம்

அங்கு,  திண்டிவனம் சந்தை மேடு பகுதியை சேர்ந்த சரவணன் மகன் உதயகுமார் (வயது 30) என்பவரும், திண்டிவனம் கிடங்கல்-1 ஏரிகோடி தெருவை சேர்ந்த கர்ணன் மனைவி புனிதா (43) ஆகியோர் சேர்ந்து, கணவன், மனைவி என்று பொய்யான தகவல் கூறி அங்கு வீடு வாடகைக்கு எடுத்து வசிப்பது தெரியவந்தது.

 மேலும் இவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண், திண்டிவனம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் என 2 பெண்களை வைத்து விபசார தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். பெங்களூரு ஒக்லிபுரம் பகுதியை சேர்ந்த குப்புசாமி (வயது 58),  திருவாரூர் வெங்கடேஸ்வரபுரம் ராஜாங்கம் மனைவி முத்துலட்சுமி (40) ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.

4 பேர் கைது

இது தொடர்பாக பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து,  உதயகுமார், புனிதா, குப்புசாமி, முத்துலட்சுமி ஆகியோரை கைது செய்ததோடு, அங்கிருந்த 2 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story